பொருளடக்கத்திற்கு தாவுக

சைவ நாகஸ்வர மரபு – ஆறாம் திருநாள்

சைவ நாகஸ்வர மரபு – ஆறாம் திருநாள் – எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி கமகம்

கமகம்

ஆறாம் திருநாளுக்குரிய ராகம் ஷண்முகப்ரியா.

அந்த ராகத்தில் அமைந்த ஆலாபனையை இந்தக் காணொளியில் காணலாம்.

ஆலாபனையைத் தொடர்ந்து பல்லவி இசைக்கப்படும்.

இது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.

விவரங்கள் இங்கே.

View original post

படத்தொகுப்பு

நாடகத்துறைக்கு காரை மு.சாயபு மரைக்காயரின் பங்களிப்பு

நாடகத்துறைக்கு காரை மு.சாயபு மரைக்காயரின் பங்களிப்பு – எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு அப்துல் கையூம்

நாகூர் மண்வாசனை

Sayabu

ஆருயிர்த் தமிழுக்கு காரை நகர், சாரை சாரையாய் தமிழறிஞர்களை தாரை வார்த்துக் கொடுத்துள்ள பட்டியலில் யாரை வேண்டுமானாலும் மறந்து விடலாம் ஆனால் காரை மு.சாயபு மரைக்காயரின் பேரை மாத்திரம் குறிப்பிடாமல் இருக்க முடியாது.

நாடகங்கள் இயற்றிய ஈடில்லா இவரது பங்கினை ஊடகங்கள் வேண்டுமானால் மறைக்க முயலலாம். இதனை நாடறிய செய்தல் நம் கடமை.

“உங்கள் பேனா, பிரபஞ்சத்தின் தூரிகை ஆகட்டும்” என சாயபு மரைக்காயரை வாயார வாழ்த்துகிறார் கவிப்பேரரசர் வைரமுத்து

காரை மு.சாயபு மரைக்காயரை ஒரு பேராசிரியராகவும், எழுத்தாளராகவும் மட்டுமே அறிந்து வைத்திருக்கும் தமிழ்க்கூறும் நல்லுலகம் நாடகக் கலைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை கிஞ்சித்தும் அறிந்து வைத்திருக்கவில்லை. இயற்றமிழுக்கு இவராற்றிய பணி இன்றிமையாதது என்ற போதிலும் இக்கட்டுரையில் நாடகத்துறைக்கு அவராற்றிய பங்கை மட்டுமே அலசி ஆராய்ந்திருக்கின்றேன்.

101

“நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்”

என்ற தொல்காப்பியரின் பாடலிலிருந்து தொல்காப்பியனார் வாழ்ந்ததற்கு முற்பட்ட காலத்திலிருந்தே நாடகக் கலை தழைத்தோங்கியது என்பது வெள்ளிடமலை.

நாடகக் கலைக்கு பங்களித்தவர்கள் பிராமணர்கள் மட்டுமே என்ற ஒரு அபிப்பிராயம் மக்களிடையே பரவலாக இருக்கிறது. கோமல் சுவாமிநாதன், ஒய்.ஜி.பார்த்தசாரதி, கே.பாலச்சந்தர், பூர்ணம் விஸ்வநாதன், மெரீனா, வியட்நாம் விடு சுந்தரம், ஆர்.எஸ்.மனோகர், சோ, விசு, மெளலி, ஒய்.ஜி.மகேந்திரன், காத்தாடி ராமமூர்த்தி, எஸ்.வி.சேகர், நீலு, டெல்லி கணேஷ், கிரேஸி மோகன் என நாடகக்கலையின் பங்களிப்புக்கு இவர்கள் பெயரை மட்டும்தான் எல்லோரும் பெரும்பாலும் முன்மொழிகிறார்கள்.

102
இஸ்லாமியர்களும் நாடகத்துறைக்கு தங்களுடைய பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்…

View original post 603 more words

படத்தொகுப்பு

முள்ளி மந்தின் பாரம்பரிய தோடர் குடில்கள்

முள்ளி மந்தின் பாரம்பரிய தோடர் குடில்கள் – எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி பொன்.சுதா

பொன்.சுதா சொல்வதெல்லாம்...

முள்ளி மந்தின் பாரம்பரிய தோடர் குடில்களைப் பார்க்க வாய்த்தது. பிரம்பு, கம்புகள், பலகைகள் மற்றும் மண்ணால் எழுப்பப் பட்ட குடிசைகள். அவர்களுக்கே ஆன தொழிற் நுட்பமும் தனித்துவ அழகியலையும் கொண்டிருந்தது அது. நமது கிராமத்து குடிசைகள் போலில்லாது வானவில்லின் அரை வட்டதிலான கூரை அமைப்பு.

இதைக் கட்டி 80 வருடங்கள் கடந்து விட்டது என்று சொன்னார்கள். ஒன்றரை அடிலிருந்து இரண்டு அடிக்குள் தான் இருக்கும் நுழைவாயில். பெரும் பணிவு வாய்த்தால் மட்டுமே உள்ளே நுழைய முடியும். இயல்பாக அவர்கள் போய் வந்து கொண்டிருந்தார்கள். முடியுமா என்று கேள்வி இருந்தாலும் பார்த்தே ஆக வேண்டும் என்ற ஆவலில் கிட்டத் தட்ட படுக்கை நிலையில் உள்ளே நுழைந்தேன்.

இடது வசத்தில் கல்லிலும் மண்ணிலும் எழுப்பப் பட்ட ஒரு மேடு அது தான் அவர்களது கட்டில் மற்றும் படுக்கும் இடம். மிச்சமிருந்த மிகச் சிறிய இடத்தை மிகச் சிறப்பாக பயன்படுத்தி பாத்திரங்கள் மற்றும் பொருட்களை அடுக்கி வைத்திருந்தார்கள். கீழே இருவர் படுக்கலாம். நான்கு பேர் அமரலாம். பழங்குடி வாழ்வின் எளிய வாழ்வின் காட்சியாக இருந்தது அந்தக் குடில்.

அந்த வீட்டில் இருந்த பெண் கைகுழந்தையுடன் இருந்தார். எழாவது படிக்கிற மகள் அவருடன் இருந்தாள். இன்னொரு மகளை கல்யாணம் செய்து கொடுத்து விட்டார்கள். கல்யாணமான பெண்ணின் புகைப்படம் மட்டுமே அங்கிருந்த நாகரீகப் பொருள்.

மின்சாரம் கொடுத்திருக்கிறார்கள் ஒரே ஒரு குண்டு பல்ப் மட்டும் பயன்படுத்துகிறார்கள்.

இந்த இரண்டு குடில்கள்…

View original post 118 more words

இவங்களும் நம்மவங்க தான்…. ” நியோகம் யுல்லோ” கேள்விப்பட்டிருக்கீங்களா…?

… திரு.கிரென் ரிஜிஜு கேள்விப்பட்டிருக்கிறீர்களா…? அதாங்க நம்ம மத்திய உள்துறை ராஜ்ய மந்திரி ( Minister of State ).. இவரைப்பார்த்தால் நம்ம ஊர் / நாடு மாதிரியே தெரியாது.. ஆமாம் – கிட…

மூலம்: இவங்களும் நம்மவங்க தான்…. ” நியோகம் யுல்லோ” கேள்விப்பட்டிருக்கீங்களா…?

மூக்கால் கதைத்தல்

மூக்கால் கதைத்தல் – அருமையான மருத்துவப் பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி
Dr.M.K.Muruganandan

முருகானந்தன் கிளினிக்

‘மூச்சடையான் என்று எல்லோரும் பகடி பண்ணுறாங்களாம். இவன் பள்ளிக்கூடத்திற்கே போகமாட்டன் என்று அடம் பிடிக்கிறான்’.

கோச்சடையான் வந்த நேரம் இவனை மூச்சடையான் ஆக்கிவிட்டார்கள்.

இவன் பேசினால் சொற்கள் தெளிவாக வருகுதில்லை. ஙா ஙா என்று குரல் அடைச்சுக் கொண்டு அண்டங் காக்கா கத்துவது போல வருகிறது.

மூக்கால் கதைப்பவர்களை நீங்கள் எங்காவது சந்தித்திருப்பீர்கள். ஏன் உங்கள் வீட்டில் கூட யாருக்காவது ஒரு சமயத்தில் அவ்வாறான சத்தம் வந்திருக்கலாம். ஆம் பெரும்பாலன அத்தகைய குரல் மாற்றங்கள் தற்காலிகமானவை. சிறிது காலத்தில் தானாகவே மாறிவிடும். வேறு சிலருக்கு குணமடையக் கூடிய காலம் எடுக்கும்.

ஆனால் சிலர் குழந்தைப் பருவத்தில் பேசத் தொடங்கிய காலத்திலிருந்தே அவ்வாறே தொடர்ந்து மூக்கால் பேசுவதைக் காணலாம். இவற்றில் பெரும்பாலனவற்றை பொருத்தமான சிகிச்சை மூலம் மாற்றிவிடலாம். மிகச் சிலவே சிகிச்சைக்கு போதிய பலன் கொடுக்காதவையாக இருக்கும்.

எவ்வாறு ஏற்படுகிறது

ஒருவர் பேசும் ஒலியானது வாயிலிருந்து வருகிறது என்றே நாம் எண்ணுகிறோம். ஆனால் நாம் பேசும்போது காற்றானது உண்மையில் வாயினூடக மட்டுமின்றி மூக்கின் ஊடாகவும் வெளியேறுகிறது. மூக்கினாலும் வாயினாலும் வெளியேறும் காற்றின் அளவு சரியான விகிதாசாரத்தில் அமைந்திருந்தால் மட்டுமே குரல் இயல்பானதாக இருக்கும். இவற்றின் அளவில் ஏற்றத்தாழ்வுகள்; ஏற்படுவதே குரல் ஒலிமாற்றங்களுக்கும் மூக்கால் பேசுவதற்கும் காரணமாகும்.

குரல் அடைப்பதும் கரகரப்பான தொனியில் பேசுவதும் முற்றிலும் வேறானது. அது குரல் வளையில் ஏற்படும் பிரச்சனைகளால் ஏற்படுவதாகும்.

இரண்டு வகை மூக்கால் பேசுதல்

மூக்கால் பேசுவதில் இரண்டு…

View original post 469 more words

பொருத்தமான வாழ்க்கைத் துணைவரைத் தேர்ந்தெடுப்பது எப்படி ?

பொருத்தமான வாழ்க்கைத் துணைவரைத் தேர்ந்தெடுப்பது எப்படி ? – அருமையான, இன்றைய கால கட்டத்துக்கு அவசியமான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி
Dr.M.K.Muruganandan

முருகானந்தன் கிளினிக்

‘உங்களுக்கான வாழ்க்கைத் துணைவர் எப்படியானவராக இருக்க வேண்டும்.’ இந்தக் கேள்வியை ஒரு பையனிடம் கேட்டால் விடை என்னவாக இருக்கும்.

ebc4763ac8f8a296cdf63f217c73e354

பெரும்பாலனவர்களிலிருந்து பெருமூச்சுத்தான் விடையாகக் கிடைக்கும். குடைந்து குடைந்து கேட்டால் ‘ஓலை பொருந்த வேணும், சீதனங்கள் சரிவர வேணும். பெட்டையும் லட்சணமாக இருக்க வேணும்’ என்ற விடை கிடைக்கலாம்.

பெண் பிள்ளைகளிடம் கேட்டால் ‘அப்பா அம்மா சொல்லுறதைத்தானே கேட்க வேண்டும்’ என்பார்கள்.

மறுதலையாக பதின்மங்களிலேயே கண்டதும் காதல் எற்படுகிறது. பருவக் கிளர்ச்சிகள் சிந்தையில் முந்துகின்றன. பாலியல் கிளர்ச்சியை வாழ்க்கைத் துணை தேடுவதிலிருந்து பிரித்தறிந்து புரிந்து கொள்ளாத வயதில் ‘கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா?..’ என்று சிந்திப்பது மறுபுறம் நடக்கின்றன.

காதல் திருமணங்கள் அதிகமாகிவிட்ட காலகட்டம் இது. இருந்தபோதும், சாத்திரமும், சாதி, சமூக, பொருளாதார அம்சங்களும்தான் திருமணப் பொருத்தத்தின் மிகப் பெரிய அம்சமாக எமது சமூகத்திலிருப்பதை கவலையோடு ஏற்க வேண்டியிருக்கிறது.

tiu

ஆனால் அவ்வாறு மந்தை ஆட்டு மனப்பான்மையில் தொடர்ந்து இருப்பது சமூக முன்னேற்றதிற்கோ தனிப்பட்ட ரீதியான நிறைவான வாழ்விற்கோ பொருத்தமானதாகத் தெரியவில்லை. தேர்ந்தெடுப்பதில் உங்கள் பங்களிப்பு முக்கியமானதாக இருக்க வேண்டும். ஆனால் அது வெறுமனே உணர்வு பூர்வமானதாக இல்லாமல் அறிவு பூர்வமாகவும் இருக்க வேண்டும்.

உங்களுக்கான துணைவரைத் தேடுவதின் முதல் அம்சம் அவருடன் பேசுவதுதான். இதுவே பரஸ்பர புரிதலுக்கான முதற்படி. பேசுவது மட்டுமின்றி சற்றுப் பழகினால் மேலும் நல்லது. தெளிவாகவும் திறந்த மனத்துடனும் பேசுங்கள்.

பேசுவதற்கு மேலாக அவனையோ அவளையோ நன்கு அவதானியுங்கள். மகிழச்சியானவனா, சிடுமூஞ்சியா…

View original post 601 more words

இந்த சௌக்யமனி…

இந்த சௌக்யமனி…- கமகம் = அருமையான சங்கீதப் பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு Lalitharam

கமகம்

நான் இசை விமர்சனம் எழுதுவதில்லை. சில வருடங்கள் முன் வரை என் கச்சேரி அனுபவங்களை எழுதி வந்தேன் (அவை விமர்சனமாகப் பார்க்கப்பட்டன என்பது வேறு விஷயம்). அதுவும் அலுத்துப் போக எழுதுவதை நிறுத்திக் கொண்டேன். இந்த வருடம் இந்தக் கலைஞரைப் பற்றியும், இவர் கச்சேரியைப் பற்றியும் எழுதியே ஆக வேண்டும் என்று தோன்றுகிறது. நான் எழுதாவிடில் (தமிழில்) வேறு யாரும் எழுதவும் மாட்டார்கள் என்று உறுதியாகத் தோன்றுவதால் இந்த உந்துதல்.

கலைஞர் – சீதா நாராயணன். இவரைப் பற்றி இன்னும் விவரங்கள் திரட்டி 2017-ல் நிச்சயம் எழுதுகிறேன். ஏற்கெனவே இவரைப் பற்றி யாராவது விவரமாக எழுதியுள்ளார்களா என்று கூகிளாண்டவரைக் கேட்டால் – ரஞ்சனி – காயத்ரி இவரிடம் பல பக்திப் பாடல்களைக் கற்றுள்ளனர் என்ற செய்தியை மட்டும் பல தளங்களில் மாறி மாறிக் காட்டினார்.

Vid. Seetha Narayanan Vid. Seetha Narayanan

சரி இருக்கட்டும்!

கச்சேரி – 26 டிசம்பர் 2016.
இடம் – சங்கீத வித்வத் சபை.
நேரம் – காலை 9.30.

கச்சேரி 9 மணிக்குத் தொடங்கியிருக்கும். நான் அரங்குக்குச் செல்ல 9.30 ஆகிவிட்டது. நான் சென்ற போது பைரவி ராகத்தில் “ஜனனி மாமவ” பாடலைப் பாடிக் கொண்டிருந்தார். பாடுவதில் வல்லினம் மெல்லினம் வெளிப்பட வேண்டும் என்பதை தவறாகப் புரிந்து கொண்டு எந்த சங்கதி பாடினாலும் ஆஸ்பத்திரி ஐ.சி.யூ-வின் ஈ.சி.ஜி கிராஃப் போல குரலின் அளவை ஏற்றி ஏற்றி இறக்கும் சகோதர/சகோதரி/தாயாதி/இஷ்ட/மித்ர/பந்து இன்னபிற…

View original post 541 more words

நீரிழிவினால் ஏற்படும் கண்பார்வைப் பாதிப்புகள்

Source: நீரிழிவினால் ஏற்படும் கண்பார்வைப் பாதிப்புகள்

வானிலை அறிவிப்பு -சில சுவாரஸ்யமான தகவல்கள்….!!!

வானிலை அறிவிப்பு -சில சுவாரஸ்யமான தகவல்கள்….!!! = கேலி செய்வதை விட்டு விட்டு நாம் கொஞ்சம் கற்றுக் கொள்ள வேண்டும். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்

வி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்

.

.

வானிலை அறிவிப்பு இன்றைய நாட்களில் நம் எல்லோராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது… கவனிக்கப்படுகிறது.

அது எத்தகைய பின்னணியில் தயாராகிறது என்பது குறித்த சில
சுவாரஸ்யமான தகவல்கள் கீழே –

( தகவல்களுக்கு நன்றி – திரு ரமணன்,
திரு.அன்பு வேலாயுதம் மற்றும் ஜனனம் )

vaanilai-1vaanilai-2vaanilai-3

View original post

மறுபிறப்பு உண்மையா ?- Part 1

மறுபிறப்பு உண்மையா ?- Part 1 = அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு S. Nagarajan