Skip to content

கருப்பு – வெள்ளை -பொக்கிஷங்கள் – ( பகுதி-1 )

கருப்பு – வெள்ளை -பொக்கிஷங்கள் – ( பகுதி-1 ) அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்

வி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்

.

அற்புதமான பொக்கிஷம் ஒன்று கிடைத்தது …..
1850 -1900 ஆண்டுகளுக்கிடையே எடுக்கப்பட்ட
கருப்பு வெள்ளை புகைப்படங்கள்…!

இன்று வெளியாவது – சிராப்பள்ளி உச்சிப்பிள்ளையார்
கோவில். ஆம்… திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை
பிள்ளையாரைச் சுற்றியுள்ள இடங்கள் சுமார்
160 ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி இருந்திருக்கின்றன
பாருங்களேன் -எல்லாம் வெள்ளைக்காரர்கள்
எடுத்த புகைப்படங்கள் ….!!!

Tiruchirapalli-Rock-Fort,-1858

Tiruchirapalli-Rock-Fort,1868-2

Tiruchirapalli-Rock-Fort,-1869

Tiruchirapalli-Rock-Fort-1880

Tiruchirapalli-Rock-Fort,1895

இது மட்டும், அண்மையில் எடுக்கப்பட்ட வண்ணப்படம் –
தாயுமானவ சுவாமி கோயிலை ஒட்டியுள்ள பல்லவர் குகை –
இது வடிக்கப்பட்ட ஆண்டு கி.பி. 580.

pallava cave in rfort built in 580 AD

கீழே இருப்பது அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படம்- சகிக்கவில்லை …. அல்லவா …!!!

rock-fort-temple-latest-2

View original post

Advertisements

“ரமணா” மருத்துவமனைகள்

“ரமணா” மருத்துவமனைகள் = தெய்வத்தை மனித ரூபத்தில் நாம் பார்க்கலாம் என்றால் அது டாக்டர்கள்தான்.மருத்துவம் ஒரு புனிதமான துறை.அப்படிப்பட்ட புனிதத்தை கெடுக்கும் சில வியாபாரிகள் இன்று நிறையப் பேர் இருக்கிறார்கள் என்பது வேதனை தரும் விஷயம்.நல்ல டாக்டரிடம் செல்ல வேண்டும் என்பதைக் கூட நாம் இன்றைக்கு வேண்டிக்கொள்ள வேண்டிய நிலைதான் இருக்கிறது.மீண்டும் சந்திப்போம்.= எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு Kathirvel Subramaniam

நிதர்சனம்

Ramana doctorsஅப்பொழுதுதான் நான் அலுவலகம் வந்து சேர்ந்திருந்தேன்.கணினியை ஆன் செய்தவுடன் மனைவியிடம் இருந்து போன் வருகிறது.அவளும் அப்பொழுது அலுவலகத்தில் இருக்கிறாள். வயிற்றுப் பகுதியில் கடுமையான வலி இருப்பதாகவும் தன்னால் சமாளிக்க முடியவில்லை என்றும் கிட்டத்தட்ட அழுதுவிட்டாள்.அப்பொழுது அவள் ஆறு மாதக் குழந்தையை சுமந்து கொண்டிருந்தாள்.

எப்படியோ சமாளித்துக்கொண்டு அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வந்து சேர்ந்து விட்டாள்.நானும் உடனே கிளம்பி விட்டேன்.வீட்டிலிருந்து உறவினர் மனைவியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிட்டனர்.நான் அதற்குப் பிறகு மருத்துவமனை செல்கிறேன்.

எமெர்ஜென்சி என்பதால் சென்றவுடன் டாக்டரைப் பார்த்துவிட்டோம்.”எங்கே செக் அப் செய்றீங்க” என்றார் டாக்டர்.நான் மாதா மாதம் ஈரோடு சென்று  அங்குதான்  பார்க்கிறோம் என்கிறேன்.உடனே என் மீது கோபப்படுகிறார் அந்த டாக்டர் பெண்மணி.”உங்கள யாரு இப்படி பயணம் செய்யச் சொன்னது , இப்ப பாருங்க இவங்க வலியில கஷ்டப்படுறாங்க” என்று திட்டுகிறார்.

“மேடம் , நாங்கள் பார்க்கும் ஈரோடு டாக்டர் மாதம் ஒரு முறை ரயிலில் பயணம் செய்வதில் பிரச்சனை இல்லை என்றார் , அதனால்தான் ஊரிலேயே பார்க்கிறோம்” என்றேன்.என் பதிலை அவர் காது கொடுத்துக் கேட்கவில்லை.

“சரி , இப்ப  உடனே  ரெண்டு இன்ஜக்சன் போடணும் , வலி ரொம்ப அதிகமா இருக்கு உங்க மனைவிக்கு , இப்பவே அட்மிட் பண்ணுங்க”  என்கிறார்.

“மேடம் , என்னன்னே தெரியாம என்ன இன்ஜக்சன் போடறீங்க” என்று சற்று கோபமாகத்தான் கேட்டேன் நான்.

“சார் , நீங்க ட்ராவல் செய்ததுதான் பிரச்சனை…

View original post 351 more words

உயர் இரத்த அழுத்தம் – சிகிச்சை முறையில் புதிய மாற்றங்கள்

உயர் இரத்த அழுத்தம் – சிகிச்சை முறையில் புதிய மாற்றங்கள் = அருமையான மருத்துவப் பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி Dr.M.K.Muruganandan

முருகானந்தன் கிளினிக்

“சொன்ன சொல் மாறிவிட்டீர்கள்” என முகத்தில் அறையுமாப் போல அவர் குற்றம் சாட்டவில்லைத்தான். “நீங்கள் முந்திச் சொன்னது ஒன்று இன்று சொல்வது மற்றொன்று. படிச்ச நீங்களே இப்படி மாற்றிப் பேசலாமா” என்றும் கேட்கவில்லைத்தான்.

ஆனால் இது நீதி அநீதி, சரி பிழை போன்றவை சம்பந்தப்பட்ட விடயம் அல்ல. அறிவியல். அதிலும் முக்கியமாக வளர்ந்து வரும் மருத்துவ அறிவியல், அது சார்ந்த பல்லாயிரக்கணக்கான ஆதாரங்களை அடிப்படையாக வைத்து, துறை சார்ந்த நிபுணர் குழவினர் எட்டிய முடிவுகளை ஒட்டிய விடயம்.

வீட்டில் எலக்ரோனிக் கருவியில் பார்த்தபோது பிரஷர் சற்று அதிகம் என்பதால் பதற்றத்துடன் என்னிடம் வந்திருந்தார் நான் பார்த்தபோதும் கிட்டத்தட்ட அதே அளவுதான். 148/90 இருந்தது.

hypertension

“பரவாயில்லை உங்கடை வயதிற்கு அவ்வளவு இருக்கலாம்” என்று சொன்னதின் பிரதிபரிப்பு இது. அவரது வயது 63 ஆகும்.

அவர் பயப்பட்டதிலும் நியாயம் இருக்கவே செய்கிறது. நாம் மருத்துவத் தொழில் ஆரம்பித்த காலங்களில் வயதுடன் 100 க் கூட்டினால் வரும் எண்ணிக்கையின் அளவிற்கு இரத்த அழுத்தம் இருக்கலாம் என்றோம்.

பின்னர் எந்த வயதானாலும் 130/90 யைத் தாண்டக் கூடாது என்ற வரையறை வந்தது. இதையே அவர் ஞாபகத்தில் வைத்திருந்தார்.

jnc-8-dr-mansij-biswas-34-638

இப்பொழுது புதிதான வழிகாட்டல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 150/90 இருக்கலாம் என்கிறது.

உண்மைதான் மருத்துவ அறிவியல் கருத்துக்கள் கால ஓட்டத்தில் மாறுகின்றன. புதிய ஆய்வு முடிவுகளுக்கு ஏற்ப நோயாளிகளுக்கு அதிக நன்மை அளிக்குமாறு சிகிச்சை முறைகள் மாறவேண்டியது அவசியமாகிறது.

பிரஸர்…

View original post 526 more words

ஒரே மாதத்தில் குணமாக்கத் துடிக்கும் ஒரே உயிர்

விளம்பர வெறியர்களின் விளையாட்டு = நாகூர் மண்ணின் கலைமாமணிகள் →ஒரே மாதத்தில் குணமாக்கத் துடிக்கும் ஒரே உயிர் – 2009-ஆம் ஆண்டு நான் ஹாஜா பாஷாவைப் பற்றி வரைந்த கட்டுரை இது.= சற்று பெரிய பதிவு. எப்படியெல்லாம் இருக்கிறார்கள். படித்துப் பாருங்கள். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு அப்துல் கையூம்

நாகூர் மண்வாசனை

Haja Basha Photos

2009-ஆம் ஆண்டு நண்பர் ஹாஜா பாஷாவைப்பற்றி முன்னொரு கட்டுரை வரைந்திருந்தேன். அதன் தொடர்ச்சியாக இதைக் கருதிக் கொள்ளலாம்.

ஜெயகாந்தன் மறைவுச் செய்தியைக் கேள்வியுற்றதும் அவரெழுதிய “சில நேரங்களில் சில மனிதர்கள்” கதை என் மனக்கண்முன் நிழலாடியது.

“சில நேரங்களில் சில மனிதர்கள்” என்றதும் நண்பர் ஹாஜா பாஷாதான் சட்டென்று என் நினைவுக்கு வந்தார்.

ரப்பானி வைத்திய சாலா சையது சத்தார், யூனானி டாக்டர் தாவூத், வாணியம்பாடி அப்துல் கவுசர், பழனி பாரம்பரிய சித்த வைத்திய சிகாமணி, சேலம் சித்த வைத்தியர் சிவராஜ் இவர்களின் ஒட்டு மொத்த கலப்படக் கலவையாக காட்சி தந்து அருள் பாவித்தார் ஹாஜா பாஷா.

இப்பொழுது அவருக்கு  “மதனி” என்ற பட்டம் வேறு. மதினா பல்கலைக் கழகத்தில் படித்து பட்டம் பெற்றவர்கள் இப்படி போட்டுக் கொள்வார்கள் என்பது என் சிற்றறிவுக்கு எட்டிய தகவல். ஒருக்கால் இவர் தபால்வழிக் கல்வி கற்றிருந்தாரோ என்னவோ எனக்குத்தெரியாது.

தலையில் பச்சைத் தொப்பி, கைவிரலில் மோதிரமாய் டிஜிட்டல் தஸ்பீஹ், தோளில் சால்வையாக சவுதி கத்ரா, கையில் நவரத்தினங்களும், கற்களும் (அவரே தன்கையால்) பதித்த கைத்தடி, மருதாணியிட்ட தாடி மீசை, பார்ப்பதற்கு பாபா பக்ருத்தீன் பீர் போல மெஞ்ஞானியாகக் காட்சி தந்தார்.

என்னைச் சந்தித்து உரையாடியபோது இந்தியில்தான் பேசினார். அண்மையில் போபால் சென்று வந்ததாகவும் அங்கு அவருக்கு பயங்கர வரவேற்பு தரப்பட்டதாகவும் கூறினார். (விஷவாயு தாக்கியதே அதே போபால்தான்.) மாநிலம் விட்டு மாநிலம் சென்று நம்மவர் பிரபலம்…

View original post 1,122 more words

விளம்பர வெறியர்களின் விளையாட்டு

விளம்பர வெறியர்களின் விளையாட்டு = தீபாவின் சோகத்தில் பங்கெடுத்துக் கொள்ளும் நாம், இந்த கீழ்த்தரமான விளையாட்டை நிகழ்த்தியவர்கள் யாராக இருப்பினும் அவர்களின் கேவலமானச் செயலை வன்மையாக கண்டிக்க நாம் கடமைப் பட்டிருக்கிறோம்.

– அப்துல் கையூம் = எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு அப்துல் கையூம்.

நாகூர் மண்வாசனை

For my blog

கவிஞர் வைரமுத்து அவர்களின் ‘எழுத்து மோசடி’ பற்றிய விவாதங்கள் கொழுந்து விட்டு எரிகின்ற இந்நேரத்தில் எனக்கு தெரிந்த சில விஷயங்களை இங்கே பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறேன்.

ஜெயகாந்தனின் மகள் தீபா சொல்வது உண்மைதானா? நாடறிந்த கவிஞர் வைரமுத்துவிற்கு இப்படியொரு விளம்பரம் தேவைதானா? வைரமுத்துவின் சிறுகதைகளை ஜெயகாந்தன் படிக்கச் சொன்னார் என்பதற்காக வாசகர்கள் விழுந்தடித்துக் கொண்டு படித்து விடப் போகிறார்களா என்ன?

letterJayakanthan-1

ஜெயகாந்தன் அவர்களின் உடல்நிலை கடந்த பல மாதங்களாகவே மோசமாக இருந்தது அவருக்கு  நெருங்கிய வட்டாரங்களுக்கு நன்றாகவே தெரியும்.

உண்மை இப்படியிருக்க, இதுபோன்ற கீழ்த்தரமான விளம்பர யுக்தி வெளியே தெரியவந்தால் அது வைரமுத்துவின் புகழுக்கு பெரும் களங்கம் விளைவிக்கும் என்பது அனுபவப்பட்ட கவிஞர் வைரமுத்து அவர்களுக்குத் தெரியாதா என்ன? பின்னே இது யாருடைய சித்து விளையாட்டு?

ஜெயகாந்தனிடம் மிக நெருங்கிப் பழகிய நண்பர்களிடம் உண்மை என்னவென்று விசாரித்துப் பார்த்தேன். இவ்விஷயத்தில் இடைப்பட்ட தரகர்கள் நிறையவே விளையாடியிருப்பது தெரியவந்தது.

ஜே.கே.யின் புதல்வி தீபா சொல்லியிருப்பது முழுக்க முழுக்க உண்மை. இப்பிரச்சினையில் கவிஞர் வைரமுத்து இதன் விளைவுகள் அறியாமலேயே பலிகடா ஆக்கப்பட்டார் என்பது என் தாழ்மையான கருத்து.

கவிஞர் கண்ணதாசன் தன் கவிதைகளை ஒவ்வொரு வரிகளாகச் சொல்லச் சொல்ல கண்ணப்பன் அல்லது அரசு நாச்சியப்பன் போன்ற அவரது உதவியாளர்கள் எழுதி பதிவு செய்வார்கள் என்பது  நம்மில் பலருக்கும் தெரியும்.
அதே போன்று ஜெயகாந்தனிடமும் இப்படிப்பட்ட பழக்கம் இருந்து வந்தது. பல சந்தர்ப்பங்களில், அப்படி அவர் சொல்லச்…

View original post 546 more words

மதர் ஹார்லிக்ஸ் VS பாவா மெடிகல்ஸ் : கவிஞர் தணிகை

அம்மா மருந்தகங்களிலும், சில உள்ளூர் மருந்துக் கடைகளும் வரி தள்ளுபடி செய்து மருந்துப் பொருட்களை விற்கிறார்கள் அவற்றை நாம் ஊக்குவிக்க வேண்டும் = அருமையான மருத்துவப் பதிவு. சில கடைகளில் மனசாட்சிப்படி நடந்து கொள்கிறார்கள் – எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி கவிஞர் தணிகை

காதலாவது கத்தரிக்காயாவது

காதலாவது கத்தரிக்காயாவது – இதற்கு தீர்வு என்று சொன்னால் , குழந்தைகளுக்கு சிறுவயது முதல் உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் திருமணங்கள் போன்ற நிகழ்வுகளுக்கு அழைத்துச்செல்வதில் இருந்து வீட்டில் தாத்தா பாட்டியிடம் இருந்து கற்றுக்கொள்வது வரை நிறையச் சொல்லலாம் = எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு Kathirvel Subramaniam

நிதர்சனம்

loversபெங்களூர் போன்ற பெரு நகரங்களில் பெண் குழந்தையைப் பெற்ற பெரும்பாலானவர்கள்  வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டுதான் வாழ்க்கை நடத்தும் நிலை விரைவில் வந்துவிடும்.ஏன் , இப்பொழுதே அந்த நிலைதான் என்று கூட சொல்லலாம்.

“லிவிங் டுகெதர்”  எல்லாம் சர்வ சாதாரணம்.கணவன் மனைவியைப் போல் வெளியில்  செல்வார்கள் , கேட்டால் அவர்கள் “லிவிங் டுகெதர்” என்ற தகவல் கிடைக்கும்.வாடகைக்கு வீடு கொடுப்பவர்களுடம் கூட இதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்பது சிறப்புச் செய்தி .

ஐ .டி. துறையால் ஏற்பட்ட நாகரீக வளர்ச்சி உச்சக்கட்டத்தைத் தொட்டு இன்றைக்கு ஆணும் பெண்ணும் திருமணமாகாமல் ஒரே வீட்டில் வாழலாம் என்ற நிலைக்கு வந்திருக்கிறது.ஏன்  ஐ.டி. துறையை  குறை சொல்கிறீர்கள் என்று கேட்பவர்களுக்கு இதை எழுதிக்கொண்டிருப்பவனும் அதே  துறையைச் சார்ந்தவன்தான் என்பதே என் பதில்.

நான் பார்த்த வரையில் இந்த மாதிரியான கலாச்சார சீரழிவுகள் பெரும்பாலும் இந்தத் துறையைச் சார்ந்தவர்களாலேயே நடத்தப்படுகிறது.பக்கத்து அடுக்கு மாடிக்குடியிருப்பில்”லிவிங் டுகெதர்” தம்பதிகளால்(?) பயன்படுத்தி வீசி எறியப்பட்ட கருத்தடை சாதனம் எங்கள் வீட்டில் விழுந்தது ஒன்றும் ஆச்சரியமில்லை.அதையும் எடுத்து எங்கள் வீட்டு குப்பைத்தொட்டியில் போட்டு பிறகு குப்பை லாரியில் ஏற்றி விட்ட என்னை இந்தச் சமூகம் இளிச்சவாயன் என்று கூட சொல்லலாம்.

அதே துறையைச் சார்ந்தவன் என்பதற்காக அவர்களுக்காக வக்காலத்து வாங்க வேண்டும் என்று எனக்குத் தோணவில்லை.இதைத்தான் இந்தக் கூட்டம்  நாகரீக வளர்ச்சி என்று கொண்டாடுகிறது.

சரி , இவர்களாவது காயாக இருந்து பழுத்த பிறகு பழமாகி இருக்கிறார்கள்.இங்கே…

View original post 432 more words