Skip to content

எங்கூரு மொறம ….

ஏப்ரல் 8, 2015

எங்கூரு மொறம …= அதே போதைல மிச்ச காபியையும் குடிச்சுப்புட்டு, துட்டக் குடுத்துட்டு அப்பிடியே சுத்தும் முத்தும் பாருங்க ….. வானத்தப்பாருங்க … கைய விரிச்சு ஒடம்ப ஒரு முறுக்குவிடுங்க…. கண்ணு லேசா கலங்கும். இந்த உலகமும் அந்த வானமும் அம்பூட்டு அழகாவும் புதுசாவும் தெரியும்…….!= ஆஹா. என்ன ரசனை! அருமையான எழுத்து நடை, உங்கள் முகம் மறக்கவே மறக்காது. – எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் – நண்பர்கள் தவறாது படிக்க வேண்டுகிறேன் – A Treat.

அரவிந்த் யுவராஜ்

20150402-181816.jpg

படத்த நல்லா பாத்துக்குங்க ……..

சாங்கியத்த சொல்றேன்….. மண்டகப்படி மொறம மீறாம செய்யணும்… அப்பத்தான் சரியா வரும்… ரைட்டா ?!

1. நொட்டாங்கைப் பக்க மேம்மூலையில ஒரு தாம்பாளத்துல அடுக்கிவச்சிருக்கு பாருங்க, அதான் பால்பன்னு… பொஃப்புன்னு பொங்கியிருக்கும், சீனிப்பாகுல முக்கி ஊறவச்சு அடுக்கிருவாக..
“அதுல ஒண்ணு குடுங்ண்ணே” ன்னு கேக்கணும். வாழெலைல வச்சு இன்னுங்கொஞ்சம் சீனிப்பாகு ஊத்தித்தரும்போதே எச்சில் ஊறும்.. அதப்பதம்மா விண்டு பாகுல முக்கிப்பொரட்டி வாய்க்குள்ளபோட்டு மெல்லாம, நாக்கக்கொண்டியே அரைக்கணும்… அப்பிடியே கரைஞ்சு தேனா தொண்டக்குழியில இறங்கும்.. ஒரு விண்டு, அடுத்த விண்டு,… வாய் தொடங்கி உடம்பே இனிச்சுக்கெடக்கும்…. தெகட்டிராத மெதமான இனிப்பு

2. பால்பன்ன சாப்புட்டு கடைசி ஆள்காட்டிவெரல்ல அந்த எலைய வழிச்சு நக்குறது நம்ம மதுரை மரபு.. முடிச்சதும் கையக் கழுவிப்புட்டு, அரட்டம்ப்ளர் தண்ணிய வாய்க்குள்ளா ஊத்தி கொப்புளிச்சு முழுங்கிரணும்…….

ஆச்சா!!???

3. அடுத்து சோத்தாங்கைப் பக்கமாத் தெரியுதுபாத்தியளா? அதான் வடை.. அது வெறும் வடையில்ல சாமி. விசாலம் காபி கடையோட வடை. கெட்டிச்சட்னி வச்சுத் தருவாக. பால்பன்னு சாப்பிட்டு கொப்புளிச்சு முழுங்குனதுமே இது ஒண்ணு வாங்கணும். வடை மேலாக்குல மொருமொருன்னு “இந்தா ராசா”ன்னு கூப்புடும். அத நலுங்காம பிச்சு கெட்டிச் சட்னில நோகாமப் பொரட்டி வாய்லபோட்டு பட்டும் படாம மெல்லணும்.. தேங்கா-பச்ச மெளகா – வட மூணும் சரிவிகிதமா கலந்து ஒரு ருசி ருசிக்கும் பாருங்க… அப்பிடியே தூக்கும் … இப்பிடியே நாலு விண்டுல கடைசி துண்டு…

View original post 194 more words

Advertisements

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: