Skip to content

நான் மனிதனாக வாழ ஆசைப்படுகின்றேன்

திசெம்பர் 6, 2014

நான் மனிதனாக வாழ ஆசைப்படுகின்றேன் = இன்றைக்கு ஓரளவு வசதி வந்துவிட்டது.ஊருக்குச் செல்லும் பொழுது அன்றைக்கு அப்பாவை கேலி செய்தவர்கள் என்னிடம் பெங்களூரில் இருந்து எப்பொழுது வந்தப்பா , நல்லா இருக்கீங்களா என்று நலம் விசாரிக்கிறார்கள்.

இதுதான் கால மாற்றங்கள் என்பது.ஒரு மனிதனுக்கு சமூகத்தில் மரியாதை என்பது பணத்தை வைத்துத்தான் கிடைக்கிறது.அன்று அப்பாவை கேலி செய்தவர்கள் இன்று சிரிக்கச் சிரிக்க என்னிடம் நலம் விசாரிக்கிறார்கள் = Kathirvel Subramaniam = அருமை. படிப்பு தான் மனிதனின் வாழ்க்கையையே திருப்பிப் போடுகிறது. கஷ்டப்பட்டு படிக்க வைக்கும் போது ஊரெல்லாம் கேலி பேசுவார்கள் = அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் Kathirvel Subramaniam

நிதர்சனம்

3அம்மா , அப்பாவைப் பற்றி நினைக்கும் பொழுதெல்லாம் அவ்வப்பொழுது கண்ணீர் வந்துவிடுகின்றது.தினமும் அலுவலகம் வரும் முன் தெய்வ வழிபாடு நிச்சயம் உண்டு.அப்பொழுதும் அம்மாவையும் , அப்பாவையும் மனதிற்குள் வணங்கிவிட்டுத்தான் செல்கின்றேன்.ஏதாவது கெட்ட கனவு கண்டுவிட்டால் ஊரில் இருந்து இருவரும் போன் செய்துவிடுவார்கள்.வண்டீல பாத்து போயிட்டு வாப்பா என்று சொல்கிறார்கள் என்றால் நிச்சயம் முந்தைய நாள் இரவு கெட்ட கனவு கண்டிருக்கிறார்கள் என்று கேட்காமலேயே புரிந்துகொள்வேன்.அது 1983 ஆம் வருடம்.இதை எழுதிக்கொண்டிருப்பவன் மேதாவியாக வர பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்ட வருடம்.அப்பொழுதுதான் கொடுமுடியில் S.S.V பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி ஆரம்பித்திருந்தார்கள் என்று நினைக்கின்றேன்.ஊர்ப் பகுதியில் ஆங்கில வழிக்கல்வி அப்பொழுது பிரபலம் ஆகாத நாட்கள் அவை.அப்பாவிற்கு விவசாயம்தான் உயிர்நாடி.விவசாயம் செய்தெல்லாம் ஆங்கில வழிக்கல்வியில் படிக்க வைக்க முடியாதுப்பா , உன்னால பீஸ் எல்லாம் சமாளிக்க முடியுமா என்று அக்கம்பக்கத்தினர் அப்பாவிடமும் , அம்மாவிடமும் கேட்டிருக்கிறார்கள்.பையன் படிப்பில் நன்றாக வந்தால் எப்படியும் கஷ்டப்பட்டு படிக்க வைத்துவிடலாமப்பா என்றிருக்கிறார் அப்பா.அப்பா இவ்வளவு தைரியமாகச் சொல்வதற்கு எப்பொழுதும் உறுதுணையாக இருந்தவர் அம்மாதான்.ஆங்கில வழிக்கல்வியில் L.K.G – யில் சேர்ந்தாகிவிட்டது. என் சிறு வயது முதல் அப்பாவிற்கு புல்லட் என்றால் உயிர்.அதே புல்லட்டில்தான் தினமும் வீட்டிலிருந்து கொடுமுடி அழைத்துச் சென்று பள்ளியில் விட்டுவிட்டு வந்துவிடுவார்.என்னுடன் சேர்ந்து உறவினர் ஒருவரின் மகனும் வருவார்.காலையில் அப்பா என்றால் மாலையில் அவரின் அப்பா வந்து அழைத்துச் சென்றுவிடுவார்.படிப்பு எப்படிச் சென்றது என்று கேட்டீர்கள் என்றால் U.K.G படிக்கும்பொழுது…

View original post 550 more words

Advertisements

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: